அடுத்த அரசியல் பருவகாலம் நாடு ரணிலுடன் பயணிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் வலியுறுத்து!
Monday, September 16th, 2024ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஈ.பிடி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அதற்காக நாட்டுமக்கள் ஒன்றிணைந்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவரது சின்னமான எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். .
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
“கொரோனா காலத்தில் அப்போதைய அரசு வரிச் சுமைகளைக் குறைத்தமையால் நாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியது. அதேபோல இந்த நிலையிலிருந்து மீளவே சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வரவும் முடிந்தது.
ஈபிடிபியின் முன்மொழிவன தமிழ் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் வடக்கில் மாகாண சபையை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும் நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதேவேளை ‘வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. எமது தேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். .வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியினூடாகவே நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்க முடியும்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் சார்ந்த, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி. அவர் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்வது சாத்தியமாகும் என நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|