அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பேருந்து கட்டண இறுதிமுடிவு!

Thursday, July 7th, 2016

பேருந்து கட்டண மாற்றம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (6) கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இதனைதெரிவித்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்துக் கட்டண மாற்றம் தொடர்பில், நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் தமது கருத்தினை முன்வைப்பதற்கான வாய்பினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தக் கருத்துக்களுடன், கிடைக்கப்பெற்றுள்ள ஏனைய கருத்துக்கள் முன்மொழிவுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அக்குழுவினால் முன்மொழியப்படுகின்ற ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி பேருந்துக்  கட்டண மாற்றங்கள் தொடர்பில் அமைச்சரவையினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை போக்குவரத்து அமைச்சர் வெளியிடவுள்ளார்.

இந்த சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, மாகாணங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: