அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாகப் பிரகடனம்!

சுபீட்சம் மிக்க இலங்கையை உருவாக்குவதற்காக 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு மாநாடு நேற்று (27) மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானபோது ஜனாதிபதியினால் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பெறவேண்டிய சவால்மிக்க வெற்றிகள் தொடர்பில் அடுத்துவரும் மூன்று ஆண்டுகள் திட்டமிடும் நோக்கிலேயே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலா முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு 29ஆம் திகதிவரை ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற உள்ளது. இம்மாநாட்டில் 300க்கும் அதிகமானோர் பங்குபற்றுகின்றனர். இலங்கையின் சுற்றுலா கூட்டமைப்பின் தலைவரும், ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு ஆசிய மாநாட்டின் இலங்கை ஏற்பாட்டாளருமான பிரபாத் உக்வத்தை அவர்களால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
|
|