அடுத்துவரும் சில நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Friday, July 9th, 2021

இலங்கையில் அடுத்துவரும் சில நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கடந்த சில நாட்களாக மாதிரிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், பெருமளவான மாதிரிகளை பரிசோதனைக்க உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: