அடுத்தவாரம் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்!
Saturday, December 2nd, 2017
பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து டிசெம்பர் எட்டாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் பாடசாலை மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வவுச்சர்கள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நாடு முழுவதும் இயங்கும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் நாற்பது இலட்சம் மாணவ, மாணவியரின் சீருடைகளுக்காக அரசு 2,370 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அதேவேளை தனியார் பாடசாலை மாணவ, மாணவியரின் சீருடை தேவைக்காக 75 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான தாய்ல...
இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் - அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அறிவுறுத்து!
ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறினார் - உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்!
|
|