அடுத்தவாரம் கேள்விப்பத்திர திறப்பு!

Saturday, December 2nd, 2017

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவுசெய்திருந்தபோதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

Related posts:

எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது - முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  எம்.ஆர்.லத்தீப் நிய...
நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழ...