அடுத்தடுத்து தற்கொலை : தென்மராட்சியில் சோகம்!

Tuesday, July 3rd, 2018

தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் பெண்ணொருவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.
29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்கள், யுவதிகள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts: