அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்!

உலகில் உள்ள பெரிய மற்றும் சிறிய நாடுகள் எதுவாக இருந்தாலும் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தனிநபர்களின் மனித உரிமைகள் மற்றும் ஆண், பெண் சம உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் அவற்றை பாதுகாக்க வேண்டும்.
அனைத்து மொழிகள் பேசும் உரிமைகளையும் அனைத்து மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்க வழங்கப்படல் வேண்டும். இது மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன்.
ஜெனிவா இணக்கப்பாடுகளுக்கு அமைய அகதிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உலக அரசியல் தலைமைகள் தற்போது மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். உலக அரசியல் தலைமைகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை காக்க வேண்டியது அவசியம் எனவும் மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|