அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தாருங்கள் – பளை செல்வபுரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, January 17th, 2017

பளை செல்வபுரம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினரமான வை. தவநாதன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்தகொண்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட  வை.தவநாதன் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதன்போது தாம் நீண்டகாலமாக வாழ்வாதாரம்,வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு பல இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் தமக்கான தேவைப்பாடுகளை பெற்றுத்தருமாறும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மக்களது நிலைமைகளை அறிந்துகொண்ட தவநாதன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் தனது வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலமும் சில பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

16144066_1333713400035557_603471539_n

16117624_1333712143369016_1753529930_n

Related posts: