அடித்து நொறுக்கபட்ட மின் கம்பங்கள் – யாழில் சம்பவம்!

Wednesday, July 3rd, 2019

மறவன்புலவு பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக பொருத்தப்பட்ட மின் விநியோக கம்பங்கள் நேற்றய தினம் சில விசமிகளால் அடித்து நொருக்கி நிலத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதற்கான மின்சார இணைப்பை வழங்குவதற்காக தூண்கள் நடப்பட்டிருந்தன. நடப்பட்டிருந்த தூண்கள் தற்பொழுது சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: