அஞ்சல் பணிப்புறக்கணிப்பு நிறைவு!
Wednesday, June 6th, 2018அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. .
ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்பால் நாடுமுழுவதும், அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் மற்றும் பொதிகள் அஞ்சல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக அஞ்சல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
அத்தியடியில் பொது இடத்தில் கழிவுகளை வீசியபோது சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்ட ஆசிரியர்!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !
மேலும் 9 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு: ஹரீன் - மனுஷவுக்கும் பதவிகள்!
|
|