அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்!

Saturday, June 2nd, 2018

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

எதிர்வரும் 3ம் திகதிநள்ளிரவு 12மணிதொடக்கம் 5ம் திகதிநள்ளிரவு 12மணி வரை இரண்டுநாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

  • ஐந்துவருடங்களாகசேவையிலுள்ளஅஞ்சல் சேவைதரம் 11 உத்தியோகத்தர்களின் நியமனங்களைஉடனடியாகஉறுதிசெய்தல்.
  • அஞ்சல் சேவைப் பிரச்சனைகளுக்கானதீர்வாகசமர்ப்பித்தஅமைச்சரவைப் பத்திரத்தைதாமதமின்றிசமர்ப்பித்துஒப்புதல் வழங்குதல்.
  • தொழில்நுட்பகோளாறுகளைசீர் செய்துவீழ்ச்சியுற்றஅஞ்சல் சேவையைமீண்டும் நிலைநிறுத்துதல்,
  • 2012 பொறுப்புஅஞ்சல் அதிபர்; பரீட்சையைநடைமுறைப்படுத்துதல்.
  • பொறுப்புக் கொடுப்பனவைஉடனடியாகபெற்றுக் கொடுத்தல்.
  • பொறுப்பு அஞ்சல் அதிபர் பரீட்சையில் தோற்றியமுதல் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு MN-07 வேதனத்தைபெற்றுக் கொடுத்தல் கோரிக்கைகளைமுன் வைத்து இப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அதன் சங்க உறுப்பினர்களை இப்போராட்டத்தில் இணையுமாறு அழைப்புவிடுத்துள்ளது.

Related posts: