அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் இருநாள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, June 1st, 2018

அஞ்சல்தொலைத்தொடர்பு உத்தியோத்தர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 2 நாள்களுககு இந்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று சங்கம் அறிவித்துள்ளது.

ஐந்து வருடங்களாக நீடித்து வரும் அஞ்சல் சேவை தரம் 11 உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய்தல், அஞ்சல் சேவைப்பிரச்சனைகளுக்கான தீர்வாக உறுதி செய்த அமைச்சரவைப்பத்திரத்துக்குத் தாமதமின்றி ஒப்புதல் வழங்குதல், சீரற்ற தொழில் நுட்பக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்து அஞ்சல் சேவை வீழ்ச்சியை தடுத்து நிறுத்துதல், 2012 பொறுப்பு அஞ்சல் அதிபர் பரீட்சையை நடைமுறைப்படுத்தல், பொறுப்புக்கொடுப்பனவை உடனடியாகப் பெற்றுக்கொடுத்தல்., பொறுப்பு அஞ்சல் அதிபர் பரீட்சையில் தோற்றிய முதல் வகுப்பு உத்தியோத்தர்களுக்கு எம்.என்7 வேதன மட்டத்தை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  இந்தப் போராட்டம் இடம் பெறவுள்ளது.

6/2006 சுற்றறிக்கையிலுள்ள முரண்பாடுகள் தொடர்பிலான நீண்டகாலக்கோரிக்கைக்கு நியாயமான தீர்வு இன்று வரை கிடைக்க வில்லை .

இந்த தொழிற் சங்கம், குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை  வெற்றிகரமாகச் செயற்படுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க சங்க உறுப்பினர்களை ஒன்றிணையுமாறும் கோரியுள்ளது.

இதே வேளை ஒன்றிணைந்த பால் தொழிற்சங்க கூட்டமைப்பு பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கம், இலங்கைத்தபால், தந்தி ஊழியர் சங்கம், தேசிய தபால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கைத் தபால் தந்தி ஊழியர் சங்கம், இலங்கை கனி~;ட தபால் தரம் பிரிக்கும் உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை உப தபால் அதிபர்கள் சங்கம் என்பன மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

அஞ்சல் யாப்பு மறு சீமைக்கப்படாமை, 6/2006 சுற்றறிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்கப்படாமை , வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற பிரச்சனைகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைத்தே தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று0 அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கச் செயலாளர் யூ.எல்.எம் பைஸர் தெரிவித்துள்ளார்.

Related posts: