அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீண்டும் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க பெரமுன முடிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு எழுத்துமூலம் இன்றையதினம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில்
அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|