அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள் – பொது மக்களுக்களிடம் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வேண்டுகோள்!

Saturday, August 1st, 2020

சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளமையினால், வாக்களிப்பதற்காக செல்வதற்கு மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கச் செல்லமுடியும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக அவசியமாயின், நீலம் அல்லது கறுப்பு நிற குமிழ்முனை பேனைவை எடுத்துச் செல்லலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறாக கொண்டு செய்யப்படும் பேனையில், ஏதாவது ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு குறியீடோ, வர்ணமோ அல்லது இலட்சினையோ இருக்கக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர் ஒருவர், தமது வாக்கினை பதிவு செய்வதற்காக பேனையை எடுத்துச்செல்ல இயலாவிட்டால், வாக்களிப்பு நிலையத்தில், கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேனையை அவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: