அச்சமடையத் தேவையில்லை – பெற்றோருக்கு பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Sunday, May 12th, 2019

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு அச்சமடையத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் அச்சமடைவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

பாடசாலை தொடர்பான நிலைமையின்போது  பெற்றோர்கள் தரப்பிலிருந்து பார்க்கும்போது, தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் அதிக அவதானத்துடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்புக்கு குறைவான ஒரு சந்தர்ப்பம் இல்லாதமையினால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பதையே தன்னால் கூறமுடியும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில், முப்படையினர், காவல்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை இணைத்துக்கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: