அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் – உலக மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!
Wednesday, April 15th, 2020கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் என உலக வாழ் மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தற்போது உலக மக்களிடையே எதிர்காலத்தை பற்றியும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அனைத்தையும் பற்றியும் பயம் உள்ளது. இது ஒரு வேதனையான நினைவு. இருண்ட நேரம். நமது நம்பிக்கை குறைக்கப்படுகின்றது.
ஆனால் இந்த தருணத்தில் கடவுள் நமக்கு திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகள் இவைதான். பயப்படாதீர்கள், பயப்பட வேண்டாம். இது இன்று நமக்கு உரைக்கப்படும் நம்பிக்கையின் செய்தி.
எனவே மக்கள் கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம். மாறாக இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும்.
மரணத்தின் அழுகைகளை மௌனமாக்குவோம். இனி போர்கள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். ஆயுதங்களை உற்பத்தி செய்வதையும் ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்திவிட்டு ஏழைகளுக்கு உதவுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|