VAT வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் வழக்கு?

Saturday, September 24th, 2016

 

VAT வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

செப்டம்பர் 9 ஆம் திகதி வெட் வரி திருத்தத்திற்கான வர்தமானி வெளியிடப்பட்டது. அமைச்சரவை 13 ஆம் திகதி வெட் வரி திருத்தத்திற்கு அனுமதி வழங்கியது.இதனால், இம்முறையும் அமைச்சரவையின் அனுமதியின்றி தன்னிச்சையாக வெட் வரி திருத்தத்திற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

bandula

Related posts: