O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் கோரிக்கை!
Tuesday, August 16th, 2016டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் 4 இலட்சம் மாணவர்கள் வரை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சுட்டிக்காட்டிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார இதுவரை இரண்டு இலட்சம் மாணவர்கள் மட்டுமே அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், குறிப்பிட்டார்.
இதன்படி இரண்டு இலட்சம் மாணவர்கள் வரை விண்ணப்பங்களை அனுப்பாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறு, ஆணையாளர் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்து!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் - வீடொன்றின் மீது தாக்குதல் - வீட்டின் உர...
நாளாந்தம் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரி...
|
|