IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது – ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவிப்பு!
Friday, January 12th, 2024சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|