BPL இல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை ?

பங்களாதேஷின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பங்களாதேஷ் பிறீமியர் லீக் (BPL) தொடரில் பங்குபற்றவுள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு, தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் சங்கம், ஆலோசனை வழங்கவுள்ளது.
பங்களாதேஷுக்கான இங்கிலாந்துத் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட கிரிக்கெட் வீரர்களின் சங்கம், அந்தத் தொடருக்கு அங்கீகாரம் வழங்கியது.
ஆனால், பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், அதேபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படாது என்ற காரணத்தாலேயே, இங்கிலாந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
பங்களாதேஷில் காணப்படும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள அவ்வமைப்பு, தாக்குதல்கள் நடத்தப்படும் போது எவர் மீதும் நடத்தப்படலாம் என்ற போதிலும், வெளிநாட்டவர்கள் மீது – குறிப்பாக மேலைத்தேயத்தவர் மீது – அதிகளவான தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகளுள்ளதாக அறிவித்துள்ளது.
எனவே, இந்தத் தொடரில் பங்கேற்க எதிர்பார்க்கும் ரவி போப்பாரா, டைமல் மில்ஸ், றிக்கி வெசல்ஸ், சமித் பட்டேல், ஜொஷ் கொப், றிச்சர்ட் கிளீசன் போன்ற வீரர்களுக்கு, இது தொடர்பாக எச்சரிக்கை வழங்கப்படவுள்ளது.
Related posts:
|
|