93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12.00 மணிவரை வழங்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, 93 ஆவணங்களுக்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இந்த தடைக்கமைய 203 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தடைபட்டுள்ளது.
ஏனைய 133 மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளபோதும், அவற்றில் 40 நிறுவனங்களில் நிலவும் சிறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றின் தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளது இதனால் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Related posts:
|
|