90பேருக்கு அதிபர் நியமனங்கள் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

Friday, October 7th, 2016

வடக்கு மாகாணத்தில் அதிபர் தேர்வில் சித்தியடைந்த 392 பேரில் இதுவரை 90 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவித்தார். அதிபர் தேர்வில் சித்தியடைந்தோர் காத்திருக்க, தற்போது சிலருக்கு அவசரமாக நியமனம் வழங்கப்பட்டு வருவதால் ஏமாற்றமடைகின்றோம் என வடக்கு மாகாண அதிபர் சங்கம் தெரிவித்திருந்தது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஜீன் மாதம் வெளிவந்த அதிபர் தேர்விற்கான பெறுபேற்றின் அடிப்படையிலான அதிபர் தேர்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 392பேர் தேர்வாகினர். தற்போது அவர்களுக்கான பயிற்சிகளும் நிறைவுற்றுள்ளன. அதில் 90 பேருக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எமது நியமனம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு தாயாரித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முடிவுகள் இன்னும் ஓர் இரு நாட்களில் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிடைத்ததும்  அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும். அதிபர் தேர்வில் சித்தி எய்தியவர்களுக்கு அதிபர் தரத்தை வழங்கிய முதலாவது மாகாணம் வட மாகாணமே. கடமை நிறைவேற்று அதிபர்களின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த கால சேவையை முடித்தவர்கள் என கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் ஓர் தேர்வுக்கான சந்தர்ப்பம் அளிக்கும் முகமானதாகவே அமைச்சரவைப் பத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றோம். அனுமதிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் எமது கைக்கு கிட்டியதும் அதன் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் – என்றார்.

i3

Related posts: