70 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

Saturday, June 2nd, 2018

சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இலங்கை வந்த குறித்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 40 வயதுடைய  குறித்த நபரிடமிருந்து 1 கிலோ 160 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: