683 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிப்பு: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

download (1) Friday, April 13th, 2018

வலி. வடக்குப்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள்  நாளை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக்  கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  வியாழக்கிழமை(12) பிற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொன்னாலை,பருத்தித்துறை,காங்கேசன்துறை ஆகிய வீதிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் – 13 ஆம் திகதி காலை- 06 மணி முதல் இரவு- 07 மணிவரை போக்குவரத்துப் பயணத்தினை மேற்கொள்ளமுடியும்.

கட்டுவன் மேற்குப் பகுதியிலுள்ள மயிலிட்டி வடக்கு,மயிலிட்டி துறை,தையிட்டி,தென்மயிலை ஆகிய நான்கு கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள காணிகளே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.