65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு – சுகாதார கல்விப் பணியகம்!

Evening-Tamil-News-Paper_17966425419 Monday, March 20th, 2017

இலங்கை சனத் தொகையில் சுமார் 65 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் பல பிரதேசங்களில் 8,886 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் சுமார் 4,500பேர் காசநோயை ஏற்படுத்தும் பக்ரீரியாவை அடையாளம் காணும் பரிசோதனையை செய்து கொள்ளாமல் உள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பணியகம் கூறியுள்ளது.


ஜனாதிபதியின் இணையத்தளத்துள் பிரவேசித்த மாணவன் கைது!
சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணுக்கு விளக்கமறியல்!
மாலை வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை பேருந்தில் ஏற்றுங்கள் - விசுவமடு பெற்றோர் கோரிக்கை!
தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை - பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர!
மோட்டார் வாகனம் போக்குவரத்தில் இருந்து Uber நீக்கம்!