52 வயதான குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை!

Monday, October 23rd, 2017

சாவகச்சேரியில் 52 வயதான குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகச்  சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி மகாத்மாகாந்தி வீதியில் வசித்து வரும் மேற்படி குடும்பஸ்தர் சாவகச்சேரிச் சந்தையில் வியாபார நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோபாலசிங்கம் ரவிச்சந்திரன்(வயது-52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார். யாழ்.போதான வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: