50 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (17) 50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் தீர்வின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி 50 ஆவது நாளை முன்னிட்டு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இன்று பிற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வைத்துப் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப் பிரசுரங்களை யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிற்கும் எடுத்துச் சென்று விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப...
“நீர்வழி தயார் நிலை ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” – திருமலையில் இலங்கை, அமெ...
|
|