5 ஆயிரம் ரூபாவை ஒழித்தால் பொருளாதாரம் வலுப்படும் – அமைச்சர் வஜிர அபேவர்தன!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது எனது தனிப்பட்ட யோசனை என தெரிவித்த அவர் பணத்தை அச்சிடுவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் தேரிவித்துள்ளார்.
தற்போது ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சாதக நிலைமையை பயன்படுத்தி ஆசிய நாணய ஒன்றை அறிமுகம் செய்தால், ஆசியாவின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தனமேலும் சுட்டிக்காட்டியுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இரத்தப் பரிசோதனைகளை ஜனவரி1 முதல் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாது!
ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஜனவரிமுதல் ஆரம்பிக்கத் திட்டம்!
தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்!
|
|