400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

Wednesday, September 27th, 2017

மீண்டும் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது என்று சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் ஜீ விஜயவீர தெரி வித்ததுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தொடர்பாடல் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக தமிழ் பேசும் பொலிசாரை கடந்த ஆண்டு கூடுதலாக பொலிஸ் சேவையில் இணைத்துக் கொண்டதாக தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் , எதிர்வரும் ஜனவரி மாதத்தில் 250 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குவதுடன் மேலும் 400 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: