35ஆண்டுகளின் பின் யாழ்.குடாநாட்டை வாட்டியது குளிர்!

Friday, December 2nd, 2016

கடந்த 35ஆண்டுகளின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாகவும் நடா புயல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக யாழ்.பல்கலைக்கழகப் புவியற்துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல சூறாவளிகள் ஏற்பட்ட போதும் இவ்வாறான குளிரான காலநிலை உணரப்படவில்லை என்றும் தற்போது அது உணரப்படுவது காலநிலை மாற்றத்தை வெளிகாட்டுவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றுக்காலையிலிருந்து கடும் குளிரான காலநிலை நிலவியது. சராசரியாக 28 தொடக்கம் 31பாகை செல்சியசாகக் காணப்படும் வெப்பநிலை நேற்றையதினம் 21 தொடக்கம் 23 பாகை செல்சியசாகவே காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் 20பாகையும், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவில் 21 பாகையாகவும் மன்னாரில் 22 பாகையாகவும் வெப்பநிலை சராசரியாகக் காணப்பட்டது.

கடும் குளிரான காலநிலை தொடர்பில், யாழ்.பல்கலைக்கழக புவியற்துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீப ராஜா தெரிவிக்கையில் நாடாபுயல் காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டதாகவும். மழையினால் சூரியகதிர்களை மழை முகில்கள் தடுக்கின்றன என்றும் யாழ்ப்பாணத்தில் வெப்பநிலை 21 பாகையாகக் காணப்படுகின்ற போதும், நாம் உணரும் வெப்பநிலை அதனை விடக் குறைவானது. அதனாலேயே கடும் குளிரை நாம் உணர்கின்றோம். யாழ்ப்பாணத்தின் சாரீரப்பதன் 98 ஆகக் காணப்படுகின்றது. வெப்பநிலை குறைந்து சாரீரப்பதன் அதிகரித்திருப்பதனாலும் காற்றின் வேம் கூடியுள்ளமையினாலும் மிகக் குளிரான காலநிலை நிலவுகின்றது. நாம் இதனை அதிதீவிரமான நிலை என்று கணிக்கின்றோம். கடந்த 35 வருட காலத்தில் இதுவே மிகவம் குளிரான காலநிலையாகும். கடந்த காலங்களில் நாடா உள்ளிட்ட சூறாவளியின்போது இவ்வாறான குளிரான காலநிலை நிலவவில்லை. காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதையே இது காண்டுகின்றது என்றார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts:

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷ...
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி - மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதின...
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதிந்து நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமா...

வழமைக்கு திரும்பியது திணைக்களத்தின் சேவைகள் - மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும...