327 புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் இல்லை!

Monday, January 9th, 2017

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 327 அதிபர்களுக்கு இன்னமும் பாடசாலைகள் வழங்கப்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தரம் 3 பரீட்சையில் 327 பேர் சித்தி பெற்று அதிபர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் அவ்வதிபர்களுக்கான பாடசாலைகள் வழங்கப்படவில்லை.

எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அதிபர்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண தரம் பெற்ற புதிய அதிபர்கள் சங்கம் நேற்றுமுன்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் இந்த அதிர்களுக்குரிய பாடசாலைகள் வழங்கப்படவில்லையாயின் 18ஆம் திகதி கிழக்க மாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்னால் கவனவீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கவனவீர்ப்பு நடவடிக்கை பயனளிக்காத பட்சத்தில் தமக்கு நீதி வேண்டி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சங்கத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர்.

school-2-1-450x299

Related posts: