32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!

Monday, April 30th, 2018

வவுனியா மாவட்டத்தில் உள்ள 32 வியாபார நிலையங்களுக்கு எதிராக மாவட்ட பொதுசுகாதார அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 19 உணவகங்களும், 6 அத்தியாவசிய பொருள் அங்காடிகளும், 4 மருந்தகங்களும், 3 சிறப்பு அங்காடிகளும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்குகள் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் உணவு உற்பத்தி செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, களஞ்சியங்களில் பழுதடைந்தபண்டங்களுடன் வியாபார பொருட்களை களஞ்சியப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: