29 இந்திய மீனவர்கள் கைது !

Tuesday, May 31st, 2016

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேர் கல்முனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 29 பேரே இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அட்டாளைச்சேனை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அட்டாளைச்சேனை கடற்படை முகாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர மேலும் தெரிவித்தார்.

Related posts: