256 மில்லியன் டொலர்களை ஈரானுக்கு செலுத்த உடன்பாடு!

Sunday, August 7th, 2016

மசகு எண்ணெய் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் ஈரானுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டிய 256 மில்லியன் டொலர்களை செலுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், செலுத்தப்படாத நிலுவையை செலுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து ஆராய்ந்தனர்.

ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வது அல்லது ஈரானின் முதலீடுகளை வரவழைப்பது போன்ற ஏதுக்களும் இதன்போது ஆராயப்பட்டன.

Related posts: