25 வருடங்களின் பின் ஒன்றுகூடும் மாணவர்கள்!

Saturday, August 5th, 2017

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1990, 1991 ஆம் ஆண்டு கல்வியாண்டில் கலை, வர்த்தகம், முகாமைத்துவம், நுண்கலை ஆகிய துறைகளில் கற்ற சகல மாணவர்களும் 25 வருடங்களின் பின் வெள்ளிவிழாவாக யாழில் ஒன்று கூடவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஒன்று கூடல் நிகழ்வு 05-08-2017 அதாவது யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. குறித்த காலப் பகுதியில் கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களுமே இவ்வாறு ஒன்றுகூடவுள்ளனர்.

இதன்போது அக்காலத்தில் கற்று வெளியேறிய மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய மலரொன்றும் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களை 0777376975, 0713055429, 0766059563 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் ஏற்பாட்டுக் குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: