25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்கவில்லை! – கணக்காய்வாளர் திணைக்களம்!

Thursday, October 6th, 2016

25 அரச நிறுவனங்களிடம் இருந்து கடந்த வருடத்திற்கான கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த நிறுவனங்களின் வருடாந்த கணக்கறிக்கையை தயார் செய்ய முடியாது உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். லக் சதொச மற்றும் நெற்கொள்வனவு சபை என்பன இந்த நிறுவனங்களுள் அடங்குகின்றன.

இந்த நிறுவனங்கள் தொடர்பில் கொடுக்கல் வாங்கல் அறிக்கை மாத்திரம் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதனிடையே, 1545 அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கையை இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Auditor_Generals_Department_0

Related posts: