23 வருடங்களுக்குப் பின் யாழில் காணி விடுவிப்பு!

Friday, June 1st, 2018

அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த காணியில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணியே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மிகுதி காணிகளையும் விடுவிக்கும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: