23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் நிறைவடைகின்றது!

Friday, June 17th, 2016

23 உள்ளுராட்சி சபைகளினது பதிவி காலம் இம்மாதம் இறுதியுடன் நிறைவடைய உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், குறித்த உள்ளுராட்சி சபைகளினது பதிவிகாலத்தை நீடிப்பதா என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும்.அமைச்சர் என்ற வகையில் இது குறித்து முடிவு எடுக்கம் முழு அதிகாரம் தனக்கு காணப்படுகின்றது.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: