2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!

Sunday, November 21st, 2021

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், நாளை 22 ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் 23 ஆம் திகதிமுதல் குழு நிலையிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதம், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: