2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா!

Monday, April 6th, 2020

இந்த மாதத்தில் வானத்தில் பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளையதினம் 7ஆம் திகதி அதிகாலையில் இந்த பிங்க் சுப்பர் நிலா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசந்தகாலத்தின் முதல் பௌர்ணமியாக இந்த சூப்பர் பிங்க் நிலா இரவு வானத்தில் ஒளிரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலவை “இளஞ்சிவப்பு” நிலா என்று அழைத்தாலும், அதன் நிறம் இயல்பை விட வித்தியாசமாக இருக்காது. இது வானத்தில் கீழ் பகுதியில் இருக்கும் போது தங்க ஆரஞ்சு நிறமாகவும், உயரும்போது வெள்ளை நிறமாகவும் இருக்கும் எனகூறப்படுகின்றது.

ஏப்ரல் 7ஆம் திகதியன்று, நிலா 30,000 கிலோ மீற்றர் தூரத்தில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தூரம் 221,772 கிலோ மீற்றராக காணப்படும்.

நிலாவின் அளவில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதனை அன்றைய தினம் காண முடியும், இது சராசரி நாளை விட 15 வீதம் பெரியதாக தோன்றும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலாவே இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான சூப்பர் நிலாவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலா பிரித்தானிய நேரம் அதிகாலை 3:55 மணியளவில் காணப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts:

யாழ்.பல்கலை வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் தெரிவு!
நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வெற்றுக்கொடுக்க விரைவான ...
இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அ...