2017 மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி!

Wednesday, December 21st, 2016

2017 மே மாதம் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எந்த சந்தரப்பத்திலும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனவும், அதனால்தான் தேர்தல் நடைத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வருடம் மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

Maithripala

Related posts:


'பேருந்தில் எதிர்காலத்திற்கு' - நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த...
சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை - ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார...
விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...