2017 முதல் கட்டாயக்கல்வி அமுல், உயர்தர மாணவர்களுக்கு டேப்லட் வழங்கவும் யோசனை – பிரதமர்.

ranil2 Saturday, October 29th, 2016

நாட்டில் உள்ள பாடசாலைகளில்  நிலவும் சகல ஆசிரிய வெற்றிடங்களும் 2019ஆம் ஆண்டளவில் முழுமையாக நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்;

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்றப்படும். 13ஆம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும்.ஒவ்வொரு பாடசாலைக்கும் தேவையான ஆசிரியர்களை தனித்தனியாக வழங்கத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும், கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.ஆசிரியர் பற்றாக்குறையற்ற பாடசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உயர்தர மாணவ மாணவியருக்கு டேப்லேட் (tab) வழங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ranil2


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!