2017 இல் யாழ்.நகரில் அதிக வீதிகள் புனரமைப்பு!

Tuesday, November 1st, 2016

2017ஆம் ஆண்டில் யாழ்.மாநகரப் பகுதியில் கூடுதலான வீதிகள் புனரமைக்கப்படும். அத்துடன் மாநகர அபிவிருத்தித் திட்டத்தில் புனரமைப்புக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படும் என்று மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். தற்போது மாநகரப் பகுதியில் முக்கிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கரையோர பகுதிகளிலும் அனேகமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் அபிவிருத்தி திட்டத்தில் கூடுதலாக வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இதனைவிட குறித்த வீதிகளில் உள்ள சேதமடைந்த வடிகால் வாய்க்காலும் சீர் செய்யப்படும். வீதி புனரமைப்பு தொடர்பாக குழுவும் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

14627719_1836900433210274_1563021296_n

Related posts: