2017 ஆம் ஆண்டு இலங்கை ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் – ஜனாதிபதி!

இலங்கை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் 71 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாடுகையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஐக்கிய நாடுகளின் 71 ஆவது கூட்டத்தொடரில் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும், ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்று தெரிவித்து தனது உரையினை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் தொடர்ந்து உரையாடுகையில்,
புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றி ஜனநாயக மக்களுக்கு வேண்டிய சுகந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
எமது அரசாங்கத்தில் இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி இலங்கை வாழ் மக்களுக்கு கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.
Related posts:
|
|