2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Sunday, July 31st, 2016

விவசாயத் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்காகப் போட்டியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்கள், சிறந்த காளான் செய்கையாளர்கள், மரக்கறிச் செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் விவசாயிகள், நுண் நீர்ப்பாசனத்தின் கீழ் சிறந்த பப்பாசிச் செய்கையாளர்கள் என ஏய்ந்த பிரிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுக் கெளரவிக்கப்படவுள்ளனர்.

குறித்த போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் தங்கள் பகுதி விவசாயப் போதானாசிரியர் அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து ஆகஸ்ட்-19 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விவசாயப் போதனாசிரியருக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும்.

கடித துறையின் இடது பக்க மூலையில் சிறந்த விவசாயிகள்-2016 எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0212222175 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts: