2ஆயிரம் ஹெக்ரேயரில் சின்ன வெங்காய செய்கை!

குடாநாட்டில் இம்முறை போகத்தின்போது 2அயிரத்து 560 ஹெக்ரேயரில் சின்ன வெங்காயம் செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் விவசாயிகள் தமக்குத் தேவையான விதை வெங்காயத்தை தற்போது பெற்றுக்கொள்வதில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சிறுபோகத்தில் குடாநாட்டில் கூடுதலான விவசாயிகள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டனர். அதிகமான விவசாயிகள் பெரும் விளைச்சலைப் பெற்றுக்கொண்டனர். அறுவடை செய்த வெங்காயத்தை தற்போது தென்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதனால் குடாநாட்டுச் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துச் செல்கின்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாவாக விற்கப்படுகின்றது.
Related posts:
பாவனையாளர்களை ஏமாற்றிய 95 வர்த்தகர்களுக்கு அபராதம்!
சாவகச்சேரியில் சுவிஸ் பிரஜையின் சடலம் மீட்பு!
யாழ் குடா நாட்டில் சின்ன வெங்காய செய்கை மும்முரம்!
|
|