18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பா பயணங்களை மேற்கொள்ள முடியாது!

Thursday, September 14th, 2017

இறுதி போரில் பங்கேற்ற 18 படையதிகாரிகள் ஐரோப்பா பயணங்களை மேற்கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துமாறு, ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அமைய வன்னிப் போருடன் தொடர்புடைய 18 இராணுவ அதிகாரிகளுக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய குறித்த இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தை அமுல்படுத்துமாறு சயிட் அல் ஹுசெய்ன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உறுப்பு நாடுகளின் அனுமதியின்றி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை.இந்த பிரகடனத்திற்கு அமைய யாரை கைது செய்ய வேண்டும் என்ற பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார்.

Related posts: