150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!

2018 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி வீடமைப்பு கிராம நிர்மாண வேலைகளுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு திரு.பலன்சூரிய வடமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்ட 48 வீடமைப்பு கிராமங்களை பார்வையிட்டுள்ளார்.
மேலும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் புதிய வீடமைப்பு கிராமங்களுக்கான உட்கட்டமைப்புவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு நிரந்தர கட்டடம் - வட க்கின் ஆளுநர்!
மலையக தொழிற்சங்கங்களால் கூட்டு ஒப்பந்த நகல் நிராகரிப்பு!
17 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!
|
|