15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியைக் காதலித்துக் கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் -24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் நேற்றுமுன்தினம் (14) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சிறுமியின் உறவுக்காரப் பையனான இளைஞனுடன் குறித்த சிறுமிக்குக் காதல்த் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துக் குறித்த சிறுமியும், இளைஞனும் பாலியல் முறையிலான உறவு கொண்டுள்ளனர். இதன் காரணமாகக் குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். எனினும் சிறுமி கர்ப்பமடைந்து நான்கு மாதங்களுக்குப் பின்னரே கர்ப்பமான விடயம் உறவினர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்த பொலிஸார் வைத்திய பரிசோதனைகளுக்காகச் சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
|
|